பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4% மக்கள்குழு ஒப்பந்தம் உரையாசிரியர் கூறியுள்ளார். பெருநாரையும் முது. நாரையும் ஒன்றாகத்தானே இருக்கமுடியும்! பெருங்குருகும் முதுகுருகும் ஒன்றுதானே! எனவே, அடியார்க்கு நல்லார் உரையின்படி முதுநாரை, முதுகுருகு என்னும் இரண்டும் இசைத் தமிழ் நூல்கள் என்பது தெளிவாகும். 4. கலி: இடைச் சங்க கால நூல்களாகக் கலி, குருகு, வெண் டாளி, வியாழ மாலை அகவல் என நான்கு நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள், வெண்டாளி. தவிர மற்ற மூன்றும் இசைத் தமிழ் நூல்கள் எனத் தெரிய வரு கின்றன. - கடைச்சங்க காலத்தினதாகக் கூறப்படும் நூற்றைம் பது கலித்தொகை என்னும் தொகை நூலைப் போலவே, இடைச்சங்க காலத்திலும் 'கலி' என்னும் பெயரில் ஒரு நூல் தொகுக்கப்பட்டிருந்தது. கலிப்பாக்களால் ஆன நூல் கலியாகும். பரிபாடலைப்போலவே கலிப்பாவும் இசைப் பாட்டாகும்; பரிபாடல் நூலைப்போலவே, கலி நூலும் இசைத் தமிழ் நூலாகும். சான்று வருக;- ... * தொல்காப்பியம்-செய்யுளியலில் உள்ள ஒற்றொடு புணர்ந்த' என்னும் (242-ஆம்) நூற்பாவின் உரையில், உரையாசிரியர்களாகிய பேராசிரியரும் நச்சினார்க்கினி வரும்முறையே பின்வருமாறு ஒரு கருத்து தெரிவித்துள்ள G57rr : - - "அவையாவன் கலியும் பரிபாடிலும்போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன” (பேரா.). .