பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. ஒரு புது முதலியாரின் அறிமுகம் வேளாள முதலியார், தொண்டைமண்டல முதலியார், செங்குந்த (நெசவு) முதலியார், சேனை முதலியார், சைவ முதலியார் என்னும் பல வகை முதலியார் இனத்தை அறிந்துள்ள நமக்கு, மற்றொரு புது முதலியார் அறிமுகம் ஆகிறார். அவர்தான் திருவாளர் 'முருங்கை' முதலியார்; அஃதாவது முருங்கை மரத்தைத்தான் சொல்கிறேன். அமுதசாகரம் என்னும் நூலின் 162ஆம் பாடலில், முருங்கை மரம் 'ஊருடை முதலி' என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 'ஊருடை முதலியார்” என்னும் பெயரால் ஜூபிலி தமிழ்ப் பேரகராதி குறிக் கின்றது. இம்மரம், வைத்திய மலையகராதியில், 'ஊருடை' என்று சுருங்கப் பெயர் வழங்கப்பெற்றுள்ளது; சாதிப் பட்டத்தை உதறி எறிந்து விட்ட இவ்வகராதி ஒரு "சீர் திருத்தக்காரன் போலும்? முருங்கை தொடர்பாகச் சில செய்திகள் ஈண்டு நினைவுகூரத்தக்கன: 1) வீட்டுக்கு ஒரு முருங்கை மரமும் ஒரு கறவை எருமை மாடும் இருந்தால் போதும்” என்று சொல்வது உலகியல். முருங்கைக் கீரையைக் கொண்டு துவட்டல், கடையல்-மசியல், கூட்டு, சாறு, குழம்பு ஆகிய கறி வகை செய்யலாம்; முருங்கைப் பூவால் கூட்டு செய்யலாம்; முருங்கைக் காயால் கூட்டு, பொரியல், குழம்பு ஆகிய கறி வகை செய்யலாம். கறவை எருமை மாடு இருந்தால், பால், தயிர், மோர், நெய் ஆகியவற்றிற்குக் கருப்பு (பஞ்சம்) இல்லை. விருந்தினர் திடீரென வரினும், வெளியில் போய்க்