பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மக்கள்குழு ஒப்பந்தம் எல்லாம் இருந்தும் ஏனுய்ய வில்லை? நல்ல உள்ளம் நானிலத் தில்லை எல்லாரும் உய்ய என்ன வேண்டும்? பாதாங்கீர் வேண்டா பசுங்கூழ் போதும் ஆனால் அக்கூழ் அனைவர்க்கும் வேண்டும் மாளிகை வேண்டா மண் குடில் போதும் ஆனால் அக்குடில் அனைவர்க்கும் வேண்டும் ஒரு சிலர்க்கு மட்டில் பாதாங் சீரோ? பட்டின் ஆடையோ மாடமா ளிகையோ கூடகோ புரமோ? மிகப் பலர்க்குப் பழங்கூ ழுணவோ பழங்கந்த லுடையோ மழையினை ஏற்கும் மண்குடில் உறையுளோ? இன்னும் ஒருசிலர்க் கேதும் இல்லையே? என்றெல் லோர்க்கும் எல்லாம் கிடைக்குமோ அன்றே உலகம் உய்ந்த தாகுமால்! ஒருசிலர் உய்வது உலகுய்வ தாமோ? என்ன உலகம்! என்ன அமைப்பு! என்ன சமூகம்! என்ன அரசியல்! என்ன கல்வி! என்ன ஆராய்ச்சி! என்ன அறிவியல்! என்ன மதங்கள்! எல்லாம் பகட்டு எல்லாம் தோல்வி தன்னலம் ஒன்றே தரையினர் குறிக்கோள். தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர் உண்மை யானே உய்யுமிவ் வுலகம் என்று புறமும் நன்று நவிலுமால்! வறுமை பிணிபகை வையகத் தின்றி உடல்நலம் பல்வளம் ஒற்றுமை ஓங்கின் உலகம் உய்ந்ததாய் ஒப்புக் கொள்ளலாம் இவற்றினும் வேறே என்ன வேண்டும்? இவற்றினை உலகம் எய்தும் வழி எது?