பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 17 வாழ்வு-தாழ்வில் மற்ற மக்களுக்கும் பங்கு உண்டு என்ற கொள்கை உருவாகி நம்பப்பட வேண்டும். இதற்காகத் தான் பெரியவர்கள், பிறர்க்கு உதவிசெய்ய வேண்டும் என்று வற்புறுத்திச் சென்றுள்ளனர். திருவள்ளுவரையே எடுத்துக் கொள்வோமே. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மணந்துகொண்டு குடும்பம் நடத்துவது பிறர்க்கு உதவி செய்வதற்கே யாம்-ஒருவர் முயன்று உழைத்து ஈட்டும் பொருள் எல்லாம் பிறர்க்கு உதவி செய்வதற்கேயாம் - என்றெல்லாம் திருவள்ளுவர் கூறியுள்ளார். " இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”. (81) " தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு”. (212) என்பன திருவள்ளுவரின் குறள் பாக்கள். திருவள்ளுவர் இந்த அளவோடு விட்டாரா என்ன? கடவுள் தலைமேலும் கைவைத்துள்ளார்! உலகில் ஒருவன் இரந்தாவது (பிச்சை எடுத்தாவது) உயிர்வாழ நேர்ந்தால், இந்த உலகத்தைப் படைத்த கடவுள் அலைந்து திரிந்து அழிந்து போவானாக! - என்று உணர்ச்சி மேலிட்டுக் கூறியுள்ளார்: " இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்’ (1062) என்பது குறள். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார் இதனினும் பெரிய ஒர் அணுகுண்டைப் போட்டுள்ளார்: பலர்க்கும் கிடைக்க வேண்டிய உணவை - நலத்தை ஒருசிலர் மட்டும் அகப்படுத்திக் கொண்டு வாழும் வஞ்சக