பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மக்க்ள்குழு ஒப்பந்தம் தெய்வத் தன்மை இவ்வாறு உழவு, வாணிகம், போக்குவரவு, குடிநீர் முதலிய பலமுனைத் திட்டங்களுக்குப் பயன்படுவதாலேயே ஆற்றங்கரைகளில் நகரங்கள் தோன்றி நாகரிகங்களை உருவாக்கின. ஆறுகள் தம் வளங்களால் மக்களை வளர்ப் பதனாலேயே, அவற்றைத் தெய்வத் தாயாக மதித்துப் போற்றி மக்கள் வழிபடுகின்றனர். கங்கையம்மா, காவிரித் தாயே என்றெல்லாம் நம் மக்கள் அன்னையென, அழைத்து வழிபட, ஆப்பிரிக்க நைல் ஆற்றங்கரை மக்களோ, எங்கள் அப்பன் நீலன் என்பதாக ஆற்றை அப்பன் என அழைத்துப் போற்றுகின்றனராம். தமக்கு வேண்டிய வளங்களை வள்ளலென வற்றாது வாரிவழங்கும் ஆறுகளைத் தெய்வத்தன்மை உடையனவாக மதித்த மக்கள், அவ் வாறுகளிலே நீராடுவதிலும் அவற்றின் கரைகளிலே திருக்கோயில் எடுத்து இறை வழிபாடு செய்வதிலும் பேரின்பம் கண்டதோடு, அச் செயல்களைப் பெரிய அறமாகவும் கருதினர். "ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்று ஒளவைப் பிராட்டி அருளிய அமிழ்த் மொழியின் அருமை இப்போது புலனாகுமே! - s நல்வழி : 24,