பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருநாவலூர் பாடல் பெற்ற பதி: ஒரு சிற்றுார் - மிக மிகச் சிறிய ஊர்; அங்கே, விரல் விட்டு எண்ணுமளவில் ஒருசில வீடுகள் - அவற்றிலும் கூரை வீடுகளே மிகுதி; ஒரு புறத்தே பாழடைந்த ஒரு சிறு கோயில் - பக்கத்தே தூர்ந்துபோன ஒரு குளம் - இவையே உள்ளன. எனினும், இத்தகைய சிற்றுர், மாடமாளிகை கூட கோபுரம் நிறைந்த ஒரு மாபெரு நகரினும் பெரும் பெயர் பெற்றுப் பலருடைய வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியதா யிருப்பதுமுண்டு. அந்த ஊரை அத்தகைய பெருமைக்கு உரியதாக்கும் ஆற்றல் தமிழ்ப் பாடலுக்கு உண்டு. வேறு எத்தகைய வளங்களாலும் நலங்களாலும் ஒர் ஊருக்குக் கிடைக்கமுடியாத பெருமை, நாயன்மார்க ளாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்றுள்ள தமிழ்ப் பாடல்களால் கிடைத்திருப்பது உலகறிந்த உண்மை. இந்தப் பேறு பெற்றுள்ள ஊர்கள் பாடல் பெற்ற பதிகள்’ என்று பாராட்டப் பெறுகின்றன. இந்தப் பதிகளுள் திருநாவலூர் மிகவும் குறிப்பிடத்தக்கது. • - சைவத் திருப்பதிகளுள் சீர்காழி தவிர, மற்ற புதிகம் கில்லாத தனிப்பெருஞ் சிறப்பு திருநாவலூர்க்கு உண்டு. எந்தப் பதியும், புராணங்களும் சிற்றிலக்கியங்களும் அருணகிரியாரின் திருப்புகழும் இன்னபிறவும் பெற்றிருப் பினும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் என்னும் தேவார ஆசிரியர் மூவருள் ஒருவரது தேவாரப்