பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மக்கள்குழு ஒப்பந்தம் வாயிலாக அறுபத்து மூவரின் வரலாற்றை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை சுந்தரர்க்கே உரியது - இல்லையில்லை. அவரை ஈன்றெடுத்த திருநாவலூர்க்கே உரியது. ஊர்களுக்குள் உயர்ந்தது: ஒர் ஊரோ, ஒரு நாடோ, இயற்கை வளத்தாலோ அல்லது செயற்கை வளத்தாலோ பெருமை பெறுவதில்லைஅங்கே பிறந்து வாழும் பெருமக்களாலேயே பெருமை பெறும் என்னும் கருத்து முற்ற முடிந்த முடிவு. திருநாவுக் கரசரும், சுந்தரரும் பிறந்ததால் நாடுகளுக்குள் சிறந்த நாடு திருமுனைப்பாடி நாடு என்று ஆன்றோர் பலரும் அறிவித்துள்ளனர். சேக்கிழார் பெரியபுராணத்தில், "மறந்தருதி நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உனதானால் நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு. எனத் திருமுனைப்பாடி நாட்டைச் சிறப்பித்துள்ளார். சிதம்பரநாதமுனிவர் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்தில், t அன்னநாட்டினில் ஆலால சுந்தரர் உதிப்ப என்னையாள் வெண்ணெய் நாயகர் தடுத்தினி தாண்டார்”... நாட்டின் மேம்படுந் திருமுனைப்பாடிநா டென்றே ஏட்டின் மன்னிய காப்பியக் கவிகளே யிசைக்கும்.' என்று புகழ்ந்துள்ளார். புலவர் வரந்தருவார் வில்லிபாரதத் தின் பாயிரச் செய்யுளில்,

  • பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - பாடல் 11.

t திருப்பாதிரிப்புலியூர் புராணம் - திருநாட்டுப் படலம்: 103, 104.