பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மக்கள் குழு ஒப்பந்தம் பட்டிக்காட்டானும் யானையும்: பட்டிக் காட்டான் யானை கண்டாற் போல'.என்னும் பழமொழி, நிலைமையைத் தலைகீழாக மாற்றிக் காட்டு கிறது. கிராமத்தானைக் காட்டான் . பட்டிக் காட்டான் என நகரத்தார் குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. தொடக்கத்தில் மக்கள் அனைவரும் காட்டில் வாழ்ந்தவர் களேயாவர். இக்கால நாகரிகம் இல்லாதாரைக் காட்டு மிறாண்டிகள்' என்று குறிப்பிடும் வழக்காறு ஈண்டு எண்ணத் தக்கது. பண்டைய காட்டுவாழ் மக்கள், காட்டில் சில பகுதிகளை வெட்டி வீடுகள் கட்டிக் குடியமர்ந்தனர். இந்தப் பகுதிகள் பின்னர் நகரங்கள் என்னும் பெயர் பெற்றன. காடு வெட்டி சோழன் என்னும் பெயர்க் காரணமும், ‘என்ன - அவர் காட்டை வெட்டி மலையைக் கட்டி விட்டாரா?' என்னும் வழக்காறும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. நாளடைவில் நாகரிகம் பெற்ற நகர மக்கள், காடுகளிலும் காடுகள்போல் மரங்கள் செறிந்துள்ள சிற்றுரர்களிலும் வாழும் மக்களைக் காட்டான் - காட்டுப் புறத்தான் - பட்டிக் காட்டான் - என்றெல்லாம் அழைக்கலாயினர். இப்போதுள்ள கிராமப் புறங்களில் யானைகள் இருப்ப தில்லை. நகர்ப் புறங்களில் நடைபெறும் விழாக்கட்கும் சிறப்பு நிகழ்ச்சிகட்கும் யானைகள் கொண்டுவரப் படுகின் றன. சர்க்கசு என்னும் ஆட்டமும் நகர்ப் புறங்களில் நடைபெறுகிறது. இதனால் நகர்ப்புற மக்கள் யானையைக் காணும் வாய்ப்பை அடிக்கடி பெறுகின்றனர். கிராமத் தாருக்கு இந்த வாய்ப்பு அவ்வளவாக இல்லை. அவர்கள், நகர்ப்புற நிகழ்ச்சிகளில் இடம் பெற்றுள்ள யானைகளை வியப்புடன் நோக்குகின்றனர். இதைத்தான், பட்டிக் காட்டான் யானை கண்டாற்போல் என்று குறிப்பிடும்