பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மக்கள் குழு ஒப்பந்தம் உழவர்கள் கீழ் உடை மட்டும் உடுத்து ஏர் - கலப் பையைத் தோளில் சுமந்து கொண்டு மாடுகளை வயலுக்கு ஒட்டிச் செல்லும் காட்சி உள்ளத்திற்கு உவகை ஊட்டும். வயல் புறங்களில், பச்சடி வகைகள் . ஊறுகாய் வகைகள். வறுவல் பொரியல் வகைகள் - பல்வகைக் காய்கறிப் பதார்த்த வகைகள் - பழ வகைகள் - பல்வகைச் சோறுகள் (சித்ரான்னங்கள்) - பருப்பு - கூட்டு-குழம்பு-சாறு வகைகள்கட்டித் தயிர், புத்துருக்கு நெய் - அப்பளம் பப்பளம்புலவு பிரியாணி-இனிப்பு வகைகள்-வடை பாயசம் - கிரஷ், பாதாம்கீர், காபி, தேநீர் முதலிய குடிவகைகள் - இன்ன பிற ஆரவார உணவு வகைகளுள் யாதொன்றும் இன்றி, பழைய சோறோ - கஞ்சியோ - கூழோ - கணவனும் மனைவி யும் குழந்தையும் சேர்ந்துகொண்டு உட்கொள்ளும் காட்சி ஒரு வகையில் இரங்கத் தக்கதாயினும் இயற்கையோ டியைந்த இன்பக் காட்சியாகும். சிலர் இடுப்பில் கட்டவேண்டிய துணியைத் தலையில் சுற்றிக் கட்டிக் கொண்டு வெறுங் கோவணத்தோடு வேலை செய்வதற்கு என்ன பெயர் சொல்வதென்று புரிய வில்லை. துணியை இடுப்பில் கட்டாமல் தலையில் கட்டிக் கொண்டால், துணி சேறு புழுதி முதலியவற்றால் அழுக் காகாமல் இருக்கும் நடமாடி வேலை செய்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் வசதியாயிருக்கும் - ள்ல்லாவற்றிற் கும் மேலாக, தலையை வெயில் தாக்காமல் இருக்கும்போதிய உடை வசதியும் இல்லாதிருக்கலாம். இன்னபிற காரணங்களால் கோவணாண்டிகள் காட்சி கொடுக்கின் 'றனர். இவையெல்லாம் நகர்ப்புற மைனர்'கட்குப் புரியாத புதிர்களாகும். . பழக்க வழக்கங்கள் : சிற்றுார் மக்கள் கள்ளங்கபடின்றி ஒருவரோடொருவர் கலந்து பழகும் முறை மிகவும் இனியது. ஒருவரையொருவர்