பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மக்கள்குழு ஒப்பந்தம் 2) அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் நிறைந்திருந்த தால் பாதிரிக்குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. பாடலிபுத்திரம் என்றாலும் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் என்பதுதான் பொருள்; எனவே, பெயர்க் காரணத்தாலும் இந்தக் கருத்து பொருத்தமானது என்பது புலப்படும். - 3) எனது கெடிலக்கரை நாகரிகம் என்னும் நூலில் கெடிலத்தின் திசை மாற்றம், கெடிலத்தின் தொன்மை என்னும் தலைப்புகளில் பாதிரிக்குப்பம் முத்தால் நாயடு என்னும் முதியவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். கெடிலம் முற்காலத்தில் வண்டிப்பாளையம் அருகே ஒடியதாகவும், அந்தப் பகுதியில் நிலத்தைத் தோண்டியபோது அடியில் கல்மரத் துண்டுகள் (Wood Fossil) அகப்பட்டதாகவும் முதியவர் முத்தால் நாயடு கூறியதாக அத் தலைப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதியவர் முத்தால் நாயடுவிடம் நான் மேலும் சில வினவினேன். நான் : இந்த ஊருக்குப் பாதிரிக் குப்பம் என்று ஏன் பெயர் வந்தது? முதியவர் : அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந் திருந்ததால் பாதிரிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்லுகிறார்கள். நான் : பழைய காலத்தில் இந்த ஊருக்கு என்ன பெருமை இருந்தது? முதியவர் : என்ன பெருமை ஒன்றும் தெரியவில்லையே! நான் : கோயில் குளம் - அப்படி - இப்படி என்று ஒன்றும் பெருமை இருக்கவில்லையா?