பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மக்கள்குழு ஒப்பந்தம் நிலம்’ என்று ஆசிரியர் கூறியிருப்பதிலிருந்து, போனால் போகிறதென்று இரக்கப்பட்டு நிலம் பொறுத்துக்கொண் டிருப்பதாகவும் ஒரு குறிப்பு கிடைக்கின்றது. புகழில்லாத வர்களால் ஒரு பயனும் இல்லையாதலின், அவர்களைச் சுமந்து கொண்டிருக்கும் நிலப்பகுதியால் பயனில்லை என்றார் திருவள்ளுவர். அப்படியே ஏதாவது அந்நிலத் தால் பயன் இருக்குமாயினும், ஒன்றுக்கும் உதவாதவர் களையும் இழிசெயல்களே புரிபவர்களையும் சுமந்துகொண் டிருக்கிற ஒருவசையே போதுமே அந்நிலத்திற்கு! எனவே, வசை (பழி) யில்லாத முறையில் அந்நிலத்தால்வளப்பமான பயன் அளிக்கமுடியாது - என்னும் கருத்தில் வசையிலா வண்பயன் குன்றும் என்றார் ஆசிரியர். எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று ஒளவையாரும் புறநானூற்றில் புகன்றுள்ளாரே! உலகில் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றி மறைவதைப் போலவே மக்களும் தோன்றி மறைகின்றனர். என்ன பயன்! சிலர் ஆடு மாடுகளைப்போல-ஏன், அவற்றினுங் கேடாக வாழ்க்கை நடத்துகின்றனர்; அந்தோ அளியர்! நேற்றுச் செய்ததையே இன்றும் செய்கின்றனர்-இன்று. செய்வதே நாளையும்! அதாவது நாடோறுந்தான் உழைக்கின்றனர், உண்ணுகின்றனர் - உறங்குகின்றனர்சிலர் உழைப்பதுகூடக் கிடையாது. என்ன வாழ்க்கை! புதிய புதிய குறிக்கோள்களும் திட்டங்களும் நிறைவேற்றங் களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? புதிய புதிய அருஞ்செயல்கள் புரிந்து-பெரும் பணிகள் ஆற்றிப் புகழுடன் வாழ்வதே குறிக்கோள் வாழ்க்கையாகும். இங்ங்ன மின்றிச் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கும் நாட்களை வாழ்நாளில் சேர்த்துக் கணக்கிட முடியாது. அதாவது, ஒருவன் ஒரு திங்களில் (மாதத்தில்) முதல் நாள் வீணே உண்டு உறங்கிக் காலங்