பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மக்கள்குழு ஒப்பந்தம் மன்னராட்சி, சர்வாதிகாரம் அல்லது டிக்டேட்டர்ஷிப்” (Dictatorship) எனப்படும் தனித்தலைவராட்சி, ஜனநாயகம் அல்லது டெமாகரசி (Democracy) எனப்படும் மக்களாட்சி என்னும் மூவகைக்குள் ஏறக்குறைய அடக்கிவிடலாம். இம் மூன்றனுள், இன்று மன்னராட்சி என்பது பெயரளவில் தான்! அஃதும் ஒருவகை மக்களாட்சி போன்றதே! ஆதலின் அதனை விட்டுவிடுவோம். ஏனைய இரண்டனுள், தனித் தலைவர் ஆட்சியில் நிறைகள் குறைவு - குறைகள் மிகுதி; மக்களாட்சியில் குறைகள் குறைவு - நிறைகள் மிகுதி; இதனால் இம் மூன்றனுள் இன்று மக்களாட்சி மதிக்கப் படுகிறதே தவிர, மற்றபடி, இந்த மக்களாட்சி வள்ளுவர் காட்டிய அரசியலின் அடிப்படையாக முடியுமா? இப்போது நாம், வள்ளுவர் காட்டிய அரசியல் மக்க ளாட்சியின் அடிப்படையில் அமைந்ததா? அல்லது தனித் தலைவராட்சியின் அடிப்படையில் அமைந்ததா? என்று முடிவெடுக்க வேண்டும். என்னைக் கேட்டால், வள்ளுவர் காட்டிய அர சி ய ல், மக்களாட்சியின் அடிப்படையில் அமைந்தது மன்று; தனித் தலைவராட்சியின் அடிப்படை யில் அமைந்தது மன்று; இரண்டிலுமுள்ள குறைகள் ஒரு சிறிது மின்றி, இரண்டிலுமுள்ள நன்மைகளின் அடிப்படை யில் அமைந்ததே வள்ளுவர் காட்டிய அரசியலாகும். என்று கூறுவேன். மக்களாட்சி, தனித் தலைவராட்சி என்னும் இரண்டிலுமுள்ள நன்மைகளின் திரட்சியே, வள்ளுவர் காலத் தமிழகத்தில் மன்னராட்சியாகக் காட்சி யளித்தது. அத்தகைய மன்னராட்சியே வள்ளுவர் காட்டிய அரசியல் என்பது எனது துணிவான கருத்து. இதற்கு வள்ளுவத்திலிருந்து அகச்சான்றுகள் வேண்டுமா? இதோ! நிரம்ப உண்டு : • r