பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

எங்களது இதயங்களைக் கவர, அற்புதங்களைக் கையிலேந்திக் கொண்ட மதங்கள் எத்தனை? எங்கள் செவியில், அவை சிதறிய மந்திர நூல்கள் எத்தனை?

ஜெப மாலையின் சரட்டை எங்கள் கையில் கொடுத்து, நாங்கள் உருட்டுகின்ற அழகைப் பார்த்து, 'இன்றோடு உங்கள் பாபங்கள் மன்னிக்கப்பட்டன' என்று கூறிய குருமார்கள் எத்தனையோ பேர்கள்.

அதற்குப் பிறகும், நாங்கள் உலகத்தின் பட்டி தொட்டி கள் தோறும் இருந்து வருகின்றோம் - வாழ்ந்து வருகின்றோம்.

அடிமைகளாக நாங்கள் இருந்து வந்த பகுதிகளில் எங்கட்கு சுதந்திரமளிக்க பல அசோகன்கள், சாலமோன்கள், தீர்த்தங்கரர்கள், பெளத்தர்கள், இயேசு கொள்கைவாதிகள், முகமது நபி வாரிசுகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆபிரகாம் லிங்கன்கள், தாமஸ் பெயின்கள், காந்தியடிகள், தந்தை பெரி யார்கள், அறிஞர் அண்ணாவைப் போன்றவர்கள் வந்தார்கள்:

நாங்கள் நம்பிக்கை என்ற மதச் சேற்றில் புதைந்து கிடந்த நேரத்தில், விஞ்ஞானக் கைக்கொடுத்துத் தூக்கி விட்டவர்கள் aា(ទ្វ

மிருகங்களாகக் காடுகளில் நாங்கள் அலைந்து திரிந்த நேரத்தில் - கடலின் அழகும், அழகின் சிசிப்பும், மலைமிடுக்கி: உயர்வும், கவிதை உருவில், கதைப் போக்கில், வடித்துக் காட்டியவர்கள் கோடான கோடிகள்:

மேற்கூறியவர்களிடமிருந்து பொதுமக்களாகிய நாங்கள், கைமாறி கைமாறி வருகின்றபோது, தத்துவச் சூட்டால், கருத்துக் கொதிப்பால், சிந்தனை நெருப்பால், விஞ்ஞானத் தழலால், மெஞ்ஞானக் கனலால், மொழியின் இளஞ்சூட்டால், நாங்கள் வெந்து வெந்து புடம் போட்ட பொன்னொளிர்த் தங்கமாகவே மாறிவிட்டோம்!

இனிய பொது வாழ்க்கைக்கு ஏற்றப் பொருட்களாக நாங்கள் மாற்றப்பட்டதால், பொது மக்கள் என்று அழைக்கப் பட்டோம்!