பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

节酸酶 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

இத்தகைய நாங்களே, இன்னும் பக்குவப்பட்டாக வேண்டும் போலும்! ஏனெனில், எப்பொருளின் மீதும் காலத்தால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நெருக்கடி நிலைமையால், கசடு ஏறல் இயல்புதான்ே!

இரசம் போகாத கண்ணாடி என்றாலும், முகம் பார்க்கும் முன்பு அதை ஒருமுறை துணியால் துடைப்பது வழக்க மில்லையா?

ஒளி தரும் வைரம்தான்் எனினும், நாய்த் தோலால் அதைச் சுத்தப்படுத்துவது உண்டே?

மாற்றுக் குறையாத தங்கமானாலும், அதன்மீது படிந்துள்ள துசைத் துடைத்துத்தான்ே ஆகவேண்டும்?

எனவே, அவ்வப்போது எங்களில் ஒருவர் தோன்றி - எங்களைத் துய்மைப்படுத்துவதும் உண்டு! - ஆற்றுப் படுத்துவதும் உண்டு!

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அதற்கேற்ப பலர் பற்பலத் துறைகளிலே எங்களைச் சந்தித்தனர்:

தத்துவஞானிகள், விஞ்ஞானிகள், மொழிப் பேரறி ஞர்கள், சமாதான்ப் பிரியர்கள், அடிமைகளின் ஆதரவாளர்கள், விடுதலை வீரர்கள், சமதர்மக் கொள்கைவாதிகள், இலட்சிய வீரர்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர் எனப்படும் சுயமரியாதைக்காரர்கள், அத்தனை பேரும் எங்களைச் சந்தித்தார்கள்!

தேவையான நேரத்தில், தேவையானவற்றை மனக்கசப் பின்றி வாரி வழங்கும் வள்ளல்களும் மேற்கூறியோருள் ஒருவகையினர் தாமே!

எங்கள் நினைவில் மாறா தத்துவமாய், குறையா நிலவாய், குன்றாத பொருளாய், வளையாத சீராய் நிலைத்து, செழித்து, எம்முடைய மனம் களிக்க நிழலாடிக் கொண்டிருப் பவர்களுள் மறைந்துபோன எங்கள் மக்கள் திலகமும் ஒருவராக இருந்தார்.