பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

செத்த கருடனைப் பார்த்து, இனி சாகப் போகும் காக்கைகள் கரைதலைப் போல, கூட்டங்கூட்டமாக எங்களிலே எண்ணற்றோர் கரைந்தோம்! ஓலமிட்டோம்!

எரி நெருப்புக்கு முன்னே குபுகுபு வென்று எம்பி, எம்பிப் படர்ந்து, பரவலாக ஒடும் புகைப் படலம் போல, பொது மக்களாகிய நாங்கள் வீதிவீதியாக, ஊர் ஊராக ஒடி, எம்.ஜி.ஆர். மரண செய்தியைக் கூறி கண்ணிர் உகுத்தோம்!

தமிழக மக்கள் வானத்தை நோக்கி வாய்விட்டுக் கதறினார்கள்: 'புரட்சித் தலைவா! பொன்மனச் செம்மலே! நீ" போய் விட்டாயா என்று அலறினோம்! அழுது தேம்பினோம்! இருண்ட வானம்தான்் தென்பட்டது எங்களுடை விழிகளுக்கு:

நிமிர்ந்த குன்றுகள் போல நெஞ்சுயர்த்தி நடந்த நாங்கள், புரட்சித் தலைவர் இறந்தார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பு, பூகம்பம் கண்ட பூமிபோல நிலை குலைந்தோம்!

புரட்சித் தலைவரே! எம்.ஜி.ஆரே! மக்கள் திலகமே மறைந்து விட்டாயா? என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்திட்டத் தாய்க் குலத்தின் கண்கள், தடாக நீரூற்றைப் போலக் கண்ணிரைச் சுரந்தன!

§ {

ஏ... சூரியனே, சந்திரனுக்கு நீ கொடுத்த ஒளியை அபகரித்துக் கொண்டா - கருஞ் சூரியனாக மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றாய்?' என்று பரதவித்தோம்!

போர்க் களத்திலே பாய்ந்தோடும் பரிகளைப் போல எம்.ஜி.ஆர். பாசவெறி, சோகவெறி, தெருத் தெருவாக அவரின் மரண முழக்கங்களைக் கரிக்கோடுகளால் வேகவேகமாக கிறுக்கித் தள்ளின!

தமிழகத்தின் பட்டித் தொட்டிகள், நகரங்களின் சந்து முனைகள், வீதிகள், மக்கள் நடமாடும் தார் சாலைகள், அனைத்திலும், மக்கள் திலகம் படங்களை வைத்து, பூ மாலை