பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4s; மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். ஒழுக்க நடத்தைகளுக்கு முன் மாதிரியாக, பற்றுப் பாசச் செயல்கட்கு ஏற்றவாறு, புகழ் பூக்கின்றது! மக்கள் திலகத்தின் புகழும் அத்தகையதே!

மதவாதப் பிரிவினரைச் சேர்ந்த வைணவர் எப்படி திருநாமத்தை நெற்றியில் போட்டுக் கொள்கின்றனரோ, சைவர் திருநீற்றைப் பூசிக் கொள்கின்றனரோ, கிறித்தவர் சிலுவையைக் கழுத்தில் அணிந்து கொள்கின்றனரோ, இஸ்லாமியர் தலை குல்லாவைத் தரித்துக் கொள்கின்றனரோ, அதுபோல அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவை, எம்.ஜி.ஆர். தனது கட்சிக் கொடியில் பொறித்து, எங்களில் எண்ணற்றோரை அண்ணாவின் வாரிசாக மாற்றி விட்டார்.

தமிழக மக்கள் சந்திக்கப் போகும் பசுமையான எதிர்காலம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் போன்ற தனிப்பட்ட நல்ல பண்புள்ள கலைஞர்களாலும், அரசியல் அறிஞர்களாலும் நிர்ணயிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!

சமுதாய முன்னேற்றத்தின் மொட்டுகள், கிளர்ந்தெழும் துயவர்களுக்காக மலர்கின்றன. எங்களுடைய நெஞ்சங்களின் எந்த இடங்களிலும் இருண்ட பாகங்கள் இருக்கக் கூடா. எம்.ஜி.ஆர். என்ற ஒளி விளக்கே சுடருதறும்!

பொது மக்களாகிய நாங்கள், தொழ வேண்டிய அன்பு பீடம், எங்களுடைய நெஞ்சங்களாகவே இருக்க வேண்டும். ஆனால், அதற்குள்ளாக எம்.ஜி.ஆர். எதிர்பாராமல் நோய் என்ற காற்றலைகளால் அலைகழிக்கப்பட்டார்: தாக்கப்பட்டார்:

இந்த இக்கட்டான வேளையில் 24.12.1987ஆம் நாளின் எழு ஞாயிறு, வழக்கம் போல வாராமல், கோழி, பூனைகளைப் பிடிக்க வருகின்றவன் பதுங்கிப் பதுங்கி வருவதைப் போல கார்மேக, வெண்மேக மோதல்களுக்கிடையே மாறி மாறி வந்தது:

எங்களுடைய முகத்தோற்றக் காட்சிகள் எல்லாம் தோலுரிந்த ஆடுகளைப் போலவே தொங்க ஆரம்பித்தனி