பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $33

கொண்டன! அவற்றையெல்லாமா தமிழகப் புலவர்கள் பாடினார்கள்?

பாரியின் தேர் வருமா? படருவோமா? என்று காலம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த ஒரு முல்லைக் கொடிக்குத்தான்், சாகா வரம் பெற்றத் தமிழ்ச் சந்தம் கிடைத்தது:

புரட்சித் தலைவரும் அது போன்ற ஒரு முல்லைச் செடிதான்் அவசரத்துக்காக அவர் எந்த மரத்தையும், தொத்திக் கொண்டதுமில்லை! - தவழ்ந்து கொண்டதும் இல்லை!

நிகழ்காலத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்திற்குப் போகாதவர்கள் - இறக்கும் காலத்தை நெருங்குகிறவர்கள்!

சிறுவர்கள் நிகழ்காலத்தின் துவக்கமாகவும, எதிர் காலத்தின் முடிவாகவும் இருப்பவர்கள்! " . . .

அத்தகையவர்களைப் புரட்சித் தலைவர் கவர்ந்து விட்டார். காரணம். அவர் இயேசுவின் கொள்கையை இரகசியமாகப் பின்பற்றியவரோ, என்னவோ?

  1. - - * - - * * 'சிறுவர்களை என்னிடத்தில் வரவிடுங்கள்! ஏனெனில் - அவர்கள் இடது கைக்கு வலது கை வித்தியாசம் தெரியாத் வர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே பரலோக ராச்சியம் உரியதாகும்' என்றுக் கூறிக்கொண்டே. அவரும் புகழ் சொர்க்கத்திற்கு ஏற்றப் பொருளாகி விட்டார்:

புகழ் என்பது, ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிக் கொள்வதோ, தற்காலிகமாக மாற்றிக் கொள்வதோ அல்ல!

'வெள்ளத் தனைய மலர் நீட்டம்’ என்பது போல, ஒருவனது செயலுக்கேற்பவே அவனுடைய புகழும் அமைகின்றது. ---

மனித உடலின் சுரத்திற்கேற்ப எவ்வாறு டாக்டருடைய உஷ்ணமானி ஏறுகின்றதோ, அதனைப் போலவே, ஒருவனது பண்புகளுக்கு உகந்தபடி பழக்க வழக்கங்களுக்கு ஏற்றபடி,