பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డీజీ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். டில்லி மாநகரிலே புரட்சித் தலைவரின் மரணச்

செய்தியைக் கேட்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள்,

துடிதுடித்துப் பதைத்து சென்னை நோக்கி ஓடி வந்தார்:

'என் தாத்தா பண்டித நேருவின் சிலையை சென்னை அருகே உள்ள ஆலந்துர் என்ற ஊரிலே இரண்டு நாட்களுக்கு முன்பு நான் திறந்து வைத்தபோது, என்னைப் பாசமொழுகக் கட்டியனைத்து வழியனுப்பி வைத்தாரே, என்று கண்ணிர் சொரிய எம்.ஜி.ஆர். திருவுருவ உடலருகே சோகமே உருவாக வந்தமர்ந்தார்:

தேடி வந்தது அசோக சக்கரம் பொறித்த தேசிய கொடி, பொன்மனச் செம்மலின் பொன்னார் மேனியைப் போர்த்திட:

புரட்சித் தலைவரின் இறுதி ஊர்வலம், கர்நாடக நவாப் முகமதலி குளிப்பதற்காகக் கட்டி வைத்த மாபெரும் பங்களாவான 'மரைன்வில்லா' என்ற பகுதிக்கு, அதாவது, மெரீனா கடற்கரை என்று பெயர் பெற்ற கடற்கரையை நோக்கி

புறப்பட்டது.

தலைநகரில் கூடிய தடந்தோள் வீரர்கள் எல்லாம் தன்நிலை மறந்து அழுததைக் கண்ட வானம், பூமழை சொரிந்தது!

தாய்மார்கள், தலைவிரிந்த கோலத்தோடு, அலங்கோல மாகச் சென்ற காட்சியைக் கண்ட பூமாதா, பெய்த பூ மழையால், நலிங்கி, கசங்கி, மிதிபட்டுச் சகதியாக வேதனையுற்றாள்! - -

முப்படை வீரர்களின் சோக இசை முழக்கம் கேட்டு, காற்றும் சற்று அமைதி காட்டியது. வானத்தோடும், பூ மழையோடும் சேராமல்!

'மனிதனும் தெய்வமாகலாம்” என்ற மாண்புக்கு புரட்சித் தலைவர் இலக்கணத் திலகமாக வலம் வந்தார்: