பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

பொது மக்கள் அரங்கம் என்ற கருவறை: இதில்தான்் எம்.ஜி.ஆர். எண்ணக் கோவிலின் எழில்மிகு தெய்வமாக வீற்றிருக்கின்றார்!

இந்தக் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரும் நமக்கு. ஒன்று மட்டுமே உள்ளத்தில் நிலைத்து விடுகிறது. அது எண்னக் கோவிலைப் புலவர் நமக்கு அறிமுகப்படுத்தும்போது கூறியது : 'மணிதம் மணக்கும் மனிதாலயம் இது!”

இந்த எண்ணக் கோவிலைப் புலவர் ஏற்ற மிகு சொற்களால் எண்ணி எண்ணி எடுத்து, அழகு தமிழில் குழைத்து, கவிதைப் பூச்சு பூசி, கவின்மிகு ஆலயமாகக் கட்டி முடித்திருக்கின்றார். பொன்மனச் செம்மலுக்குப் புலவர் செம்மல் புத்தகக் கோயிலைப் புதுக்கி இருக்கின்றார்! நூல் முழுவதும் புலவரின் தத்துவச் செறிவும், தன்னேரிலாதத் தமிழும் தனிமனம் வீசுகின்றன.

பாமரர்களின் நீதிப் புத்தகமாகத் தம் படங்களை வகுத்தும் வாழ்ந்தும் காட்டியவர்க்க்கு, சாமரம் வீசியிருக்கிறார் சதுரத் தமிழால்! வாழ்க புலவர் வாழ்க எம்.ஜி.ஆர். வளர் புகழ்!

சாற்றுகவி

கலைமணியாம் மக்கள் திலகமவர் வாழ்த்திக் கலைமணியார் சொற்கோவில் கட்டி - நிலமதனில் செந்தமிழ்க்கும் சோராப் பெருங்கொடைக்கும் செய்தனரே அந்தமிலா அன்புப் பணி

இங்ங்னம் மு.பெ. சத்தியவேல் முருகன், பி.இ. 20.10.2001

சேக்கிழார் செந்நெறிக்குடில், மனை எண் : 1, 11வது தெரு விரிவு, புதுக் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை - 88