பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி S

கொள்கைகளை மேடை முழக்க இசையோடு எழுப்பிப் பாடியவரல்லவா?

அது மட்டுமா? மக்கள் வாழ்க்கைக்காக, திரைப் படங்களிலே போராடி, அறிவுரை - அதுபவக் கருத்துக்களோடு பாடியும், ஆடியும் நடித்தும் பேசியும் வந்தவராயிற்றே அவர்

ஒருகால் அவரை, சித்தன்னவாசல், குடுமியான் மலை ஒவியங்கள் என்று அழைத்து, அவற்றிற்கு ஈடாக ஒப்பிட்டு அழகு பார்க்கலாமே!

பல வண்ணக் கூட்டால் உருவாவது ஒவியம்! அப்போதுதான்் அவை அழகாகவும் அமையும். ஆனால் எம்.ஜி.ஆர். பல அரசியல் கட்சிகளின் வண்ணக் கூட்டல்லவே! அண்ணா அவர்களது பண்புத் திறமைகளின் கூட்டு வண்ணம் அவர்.

என்னய்யா இது!..... எதற்கெடுத்தாலும் மறுப்பா? எதைக் கூறினாலும் மறுப்புக்கு மறுப்பா? அட....ச்செ...! ஒருவேளை... உள்ளத்தை உலுக்கி எடுத்து, உலகையே மயங்க வைக்கும் மது என்கின்றீரா?

ச்செச்சே....! அவ்வளவு மோசமான கீழ்நிலைக்கு இறங்க மாட்டேன் நான்! மன்னிக்க வேண்டும்.

இல்லை. உமது எரிச்சலைக் கண்டு நான் அப்படிக் கேட்டுவிட்டேன். எனது அவசர புத்திக்கு வருந்துகின்றேன்! போகட்டும். பிறகு எதை உவமையாகக் கூற வந்தீர்?

இசை உள்ளத்தை உலுக்குகின்றது! உலகையும் மயக்கி மெய் மறக்கச் செய்கின்றது? அதைக் கூற வந்தேன்?

அப்படியா....! நிரல்படுத்தப்பட்ட சப்த சுரங்களும் தாளக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கும்போது, அதனை இசை என்று கூறுகிறார்கள்.

தாளம் தவறுகின்ற நேரத்தில் - சுரம் அபகரமாகின்றது. மாறுபட்ட சுரங்களின் மொத்தத் தொகுப்பு இசை