பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமனி §§

நீர் ஓர் உள்ளாழக்காரர்? பாலைவனத்திலே இருக்கின்ற பாலைவனச் சோலையை நினைத்துக் கொண்டு, இந்தப் பரந்த தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஒருவர்தான்் வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார்! எனவே, அவரைப் பாலைவனச் சோலை என்று கூறினால் என்ன, என்ற நினைப்பில் பேசுகின்றீர் இல்லையா?

பாரத்தைச் சுமந்து வரும் ஒட்டகங்களுக்குத் தண்ணிதைத் தந்து, அதன்மீது ஏறி வந்தவர்களுக்குப் பேரீச்சம்பழத்தை மட்டும் கொடுத்தவரல்லர் அவர்!

இந்த நாட்டில், ஒட்டக நிலையிலே பாரம் சுமக்கின்ற மக்கள், ஏழை மக்கள்! அவர்கள் நிலையறிந்தே கருணையோடு திட்டங்களைத் தீட்டி வழங்கினார்:

ஆனால், ஏழை மக்கள் மீது சவாரி செய்வோர் எவரையும் அவர் மதித்ததில்லை!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை மின்னல் என்று அழைப்போம்!

நீரில்லா நிலம் பிளந்து வெடித்திருப்பது போல, வாழ்விலே ஈரத்தைக் காணாதவர்கள் நெஞ்சம் வெடித்திருக்கும் போது, மழையின் வருகையைக்காட்ட மின்னல் வருவதைப் போல, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வளிக்க, எம்.ஜி.ஆர். மின்னலெனத் திடீரென்று தோன்றுவார் என்பதற்காகத்தான்ே இந்த உவமையைக் கையாண்டாய்?

வாழ்க்கை வழியைக் காட்ட வேண்டிய மின்னல், மக்கள் விழிகளைப் பிடுங்கியிருக்கின்ற கதைகளை அவர் எப்போதாவது செய்திருக்கின்றாரா?

சுடர்விட்டு ஒளிவிடும் தீபம் என்றால் பொருந்துமா? எம்.ஜி.ஆரை?

விளக்கற்றம் பார்த்து நுழைகின்ற இருளைக் கிழித்தெறிய, மீண்டும் திரியைத் துண்டி விடுவது வழக்கம்! வாழ நினைத் தவர்கள், வாழ முடியாதவர்கள் என்ற பட்டங்களைச் சுமந்து, இருள் நோக்கி மருண்டவராய், மருளேற்ற மக்களாய், துவண்டு