பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி §5

செருப்புத் தைத்துக் கொண்டிருந்த ஒருவன் சோவியத் அதிபர் ஸ்டாலினாக மாற முடிந்தது!

வண்ணமடித்துக் கொண்டிருந்த ஒருவன், இட்லராக மாறி, உலகத்தை நோக்கி, ‘என்னிடம் ஒரு நெம்புக் கோலைக் கொடுங்கள், உலகத்தின் இருசையே மாற்றிக் காட்டுகின்றேன்’ என்று, கணித மேதையும், விஞ்ஞான வித்தகனுமான ஆர்க்கி மிடிஸ் தத்துவத்தையே எதிரொலித்துச் சவாலிட முடிந்தது:

சிறு வயதிலே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், அமெரிக்கக் குடியரசுத் தலைவரான ஐசனோவரானான்!

ஒரு நேரத்தில் விற்கு வெட்டி வயிற்றைப் பேணிக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஜனாதிபதியாகி, உலகப் புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் பேச்சு மூலமாக அடிமை விலங்கொடித்த மாவீரனானான்:

சட்டிப் பானை வியாபராம் செய்து கொண்டிருந்தவன், பிற்காலத்தில் உலக வரலாற்றையே எழுதிய வரலாற்று மேதை எச்.ஜி. வெல்ஸ் ஆக மாறினான்!

இவர்கள் அனைவரும், இத்தகைய அரியவர்களாக, செயற்கரிய செய்து முடித்த சான்றோர்களாக முடிந்தபோது, ஒரு நடிகன் மட்டும் ஏன் அரசியல்வாதியாக ஆகக் கூடாது? அதனபிமானமாக நாடாளக் கூடாது? என்ற கேள்வியை எவரும் கேட்கலாமல்லவா?

அந்த வினாவிற்கு விடையாக, அடையாளமானவர்தான்் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏறக்குறைய பன்னிரண்டாண்டு காலம் தமிழகத்தைக் கோலோச்சும் கோமானாக வீற்றிருந்தார்!

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்களில் ஒருவரான ரொனால்டு ரீகன், ஆந்திர தேசத்து முதலமைச்சராக இருந்த மான வீரர் என்.டி.ராமாராவும், கலை உலகப் பிரதிநிதியாக இருந்து அரசியலரங்கத்திற்கு வருகை தந்த அடலேறுகளே!

இக்னேஸ் பெடெரெவ்ஸ்கி என்பவர் ஐரோப்பா கண்டத்திலே உள்ள போலந்து நாட்டின் பியானோ என்ற இசைக் கருவி மேதை!