பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது மக்கள் அரங்கம்

மக்களாட்சிப் பேரலைகளில் கப்பலாக, எவ்வித பயமு மின்றிச் செல்கின்ற ஒரு பொருளை, உயர்ந்த அரசியல் கண்ணோட்டத்தோடு காண்பவர்கள் அப்பொருளுக்குப் பொதுமக்கள் என்று பெயர் சூட்டுகின்றார்கள்:

மன்னராட்சியில் பொதுமக்களாகிய நாங்கள், மக்களாக இல்லையா என்றால் இல்லை என்றுதான்் கூறுவோம்!

ஏனென்றால், எங்களுடைய வாழ்க்கைக்குத் தடையாக வருகின்ற எந்தச் சட்டத்தையும் நாட்டின் தலைவர் என்று அழைக்கப்படுகின்ற ஓர் அரண்மனைப் பிறவி இயக்கி விடுமானால், தலைவன் என்ற அப்பிறவியை எங்களால் விலக்க முடியாது.

பிரான வாயு, நிலவொளி, கதிர், நீர், நெருப்பு இவை உலகத்திற்கெல்லாம் பொதுவாக இருக்கும்பொழுது, இவற்றை அனுபவிக்கின்ற நாங்களும் எவ்வித ஏற்றத் தாழ்வுமற்றப் பொது மக்கள்தாம்!

அதுபோல, எங்களை ஆள்கின்ற தலைவனுடைய செயல்முறைத் திட்டங்கள், எங்களுக்குப் பொதுமையாக்கப் படாவிட்டால், அந்தத் தலைவனை ஆட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப் பொதுமக்களுக்கு உரிமையுண்டு!