உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கல மனை மாட்சி மங்கலம் என்ப மனமாட்சி மற்று.அதன் நன்கலம் கன்மக்கட் பேறு. -பொதுமறை. மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல்ல கதிக்கு யாதுமோர் குறைவில் கண்ணில் ல:துறுங்கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. -திருஞானசம்பந்தர். தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடி பெண்பா லுகந்திலனேற் பேதா யிருகிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ! -மாணிக்கவாசகர். சமுதாயத்தின் உயிரணு குடும்பம் ஒரு சமுதாயத்தின் உயிரணு குடும்பம். அக் குடும்பத்தின் இருபெருஞ் சக்திகள் தலைவனும் தலைவியும் - ஆணும் பெண்ணும் - மண்மகனும் மணமகளும். இவ்வுண்மையை மிகு பழங்காலம் முதலாக ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்து உலகிற்கு உணர்த்திய பெருமை நம்தமிழ் முன் னேர்களின் தனிச் சிறப்பாகும். 2麗28~為