28 தோறும் இரண்டொரு பள்ளி ஒரு பள்ளி கலைப் பள்ளி ; மற்றென்று தொழிற்பள்ளி. இப்படி வீதிதோறும் இரண்டொரு பள்ளிகள் காடெங்கும் எழுவதற்குத் திருமணக் காலங்களில் செல்வர்கள் பெருங்தொகை கொடையாக வழங் கில்ை அவர்கள் பெயர் அழியாது வாழுமன்ருே ? அவர்கள் குடும்பம் அதனுல் எய்தும் புகழாலும், புண்ணியத்தாலும் வாழையடி வாழையாக வளம் பெறுமன்ருே ? கல்விக்குத் தருவதைப் போலவே, மருத்துவ மனேகட்கும் கொடையளிப்பது வர வே ற் க த் தக்கதே. அடுத்துத் தமிழ் மக்கள் திருமணம் புரேர்கிதர் வைத்து கடந்தாலும் சரி-புரோகிதர் வைக்காமல் கடந்தாலும் சரி-வேதவேள்வி முறைப்படி கடக் தாலும் சரி-புது அறிவியல் முறைப்படி நடந்தாலும் சரி-தமிழ் மனங்கமழ நடைபெற வேண்டும். தெய்வ பக்தியோடு தேவாரத் திருவாசகத் திரு முறை இசை முழங்க நடைபெறும் திருமணத்திற்கு இனே உலகில் உண்டோ? மொழிப்பற்று கம் சமுதாய வாழ்வின் உயிர் காடி. கம்காட்டுக் கோயில்களில் உள்ள பரன் - பரைக்கெல்லாம் அமைந்துள்ள தெய்வத் திருப் பெயர்களின் பலவற்றைப் பாருங்கள் ! எவ்வளவு அழகிய துய தமிழ்ப் பெயர்கள் ! ஐயன் பெயர் மாணிக்க வண்ணர் ! அம்மை பெயர் வண்டுவார்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/29
Appearance