27 மதிப்பு என்று எண்ணி ஏங்குகின்றனர். அந்த மதிப்பைத் தேடிக்கொள்ளக் கடன்பட்டு உள்ள 'மதிப்பை'யும் இழக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். என்றேனும் ஒரு நாள் சட்டம் வந்து கட்டாயமாக மாற்றுவதிலும் நாமே அறிவாக எண்ணிப் பார்த்து மாறிவிடுவது எவ்வளவோ நல்லது அல்லவா ? நம் காட்டுத் திருமணங்கள் - செல்வர் வீட்டுத் திருமணமாயினும் - ஏழை வீட்டுத் திருமணமாயினும்-ஆண்டவன் கோயிலில் எம்பெருமான் - எம்பெருமாட்டித் திருமுன்பு நடக் தால் எவ்வளவு அழகாக இருக்கும் ! செல்வர்கள் திருமணத்தில் செய்யும் பெருஞ் செலவு அவர்கள் செல்வத்திற்கு அழகுதானே. அவர்களைச் செலவழிக்க வேண்டாமென்ருல் பணத் தைப் பூட்டியே வைப்பதா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம். திருமணத்தின்போது செல்வர்கள் செய்யவேண்டிய ஒருபெருஞ்செயல் அத் திருமண கினைவாக காட்டின் கல்விக்கூடங்கட்கு மன முவந்து பெருங்கொடை வழங்குவதே. ஒரு காட் டின் வளர்ச்சி எல்லாம்-வாழ்வு எல்லாம்-அங் காட்டுக் குழந்தைகள் பெறும் கல்வி-நல்ல கல்வி -பயனுடைய கல்வி - படிப்போடு நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்கும் கல்வி-அறிவோடு ஒழுக் கத்தை வளர்க்கும் அருமையான கல்வியிலேதான் இருக்கிறது. எனவே அக்கல்வி வளர ஏராளமான பள்ளிக்கூடங்கள் தேவை. வீடுதோறும் கலையின் விளக்கம் ; வீதிதோறும் இரண்டொரு பள்ளி' என்று பாடினர் கவியரசர் பாரதியார். ஆம். விதி
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/28
Appearance