உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பொருள்களோடு பிற்காலத்தே மனம் என்னும் பொருளும் சேர்ந்திருக்கக் கூடும். வதுவை வடசொல் என்பர். அவ்வாருயின் திருமணத்திற்குரிய சொற்களுள் ஒன்ருகத் தொல்காப் பியத்துள்ளும் அது பயின்றது ஏன் ? என்பது ஆராய் தற்குரியது. வதிதல் என்பதோடு தொடர்புடைய தாகக் கருதி வதுவை என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகவே கொள்ளலாம். கடியும், மணமும் தொல்காப்பியத்துள் திரு. மனம் என்னும் பொருள் பொருந்தாமை எண்ணற் (3) பழங்தமிழர் வாழ்வில் குழந்தைத் திருமணம்’ இடம் பெறவில்லை எனலாம். ஆனல் அவ்வகைத் திருமணம் பற்றிய செய்திகள் மனுஸ்மிருதியி: லேயே காணப்படுகின்றன. தொ ல் காப் பி ய ம் திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறதே அன்றி திரு மணச் சடங்குபற்றி ஏதும் விரிவாகக் குறிப்பிடு: வதாகத் தெரியவில்லை. ஆயினும் கற்பியலில் வரும் கரணத்தின் சிறப்பை மறக்கவோ மறைக் கவோ முடியாது. கரணம் பற்றிக் கற்பியலின் முதல் ஐந்து நூற்பாக்களும் வலியுறுத்துகின்றன. அவற்றுள் ஒன்று : பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப