உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இந்நூற்பாவால் தொல்காப்பியருக்கு முன்பே 'கரணம் காலூன்றியமை விளங்கும். ஆயினும், இக்கரணம் யாது என்பதுபற்றி அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியும் என்று தோன்றவில்லை. இதுபற்றிப் பேராசிரியர் டாக்டர் வ. சுப. மாணிக் கம் அவர்கள் கருத்து வருமாறு : கரணம் என்பது தி ரு ம ன அ டை யா ள ம்; பெண்ணுெருத்தி, கன்னிமை கழிந்து மனைவிமை புக்காள் என்பதனைக் காட்டும் மனையணி என்பது என் துணிபு.’ (தமிழ்க் காதல்-பக். 154) 'மனங்த குமரியரை மனவாக் குமரியரினின் றும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கமே கரணத் தோற்றத்திற்குக் காரணம் ஆகும். காலிற்கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம்; கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ்விரண் டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த கரணங்கள் என்று தெளிகின் ருேம். இவள் மனைவியானுள் என்ற அறநிலையைச் சிலம்பு கழித்த அடியாலும் மலர்வேய்ந்த முடியா லும் அறிந்து கொள்ளலாம்.' (தமிழ்க் காதல்-பக். 165) மணமான மங்கையரே மலர்வேய்வர் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஈண்டு பேராசிரியர் இலக்குவனர் இயம்பும் இன்னுெரு வகை விளக்கமும் எண்ணுதற்குரியது. அது இது: