40 கரணம் என்ற சொல்லுக்கு இன்னுெரு பொரு ளும் கொள்ளலாம். இக்காலத்தும் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க்கணக்கு எ ழு தும் கணக்கப்பிள்ளைகள் ஆவார். கரணம், கணக்கு எழுதுவோரைச் குறிப்பதால், எழுதுதலையும் குறிப் பதாகும். ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்ன பெண் மனைவி என்று எழுதிக் கொள்ளும் பழக்க மும் இருந்திருக்கலாமன்ருே ? அவ்வாறு எழுது தலையே ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்று குறித்திருக்கலாமன்ருே? இன்றும் பழங் கால முறைப்படி திருமணம் கொள்வோர், திருமணத் துக்க முன்னுல் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டில் கூடி இவ்வாறு எழுதி உறுதிப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இக்கிகழ்ச்சியை மனவோலே எழுதுதல் என்றும், “நிச்சயதார்த்தம் என்றும், வெற்றிலைப் பாக்கு மாற்றுதல்’ என்றும் அழைப்பர். தொல்காப்பியர் காலத்து வழக்கமே இன்றும் தொடர்ந்து வங்துள் ளது என்று கொண்டால் குற்றம் என்ன ? இப் பழக்கமே பதிவு முறையாகவளர்ச்சிபெற்றுள்ளது.' (டாக்டர் சி. இலக்குவளுர்-தொல்காப்பிய ஆராய்ச்சி-பக். 179) (4) இனி, பழங்தமிழ் இளையோர் பெரிதும் முதற் கண் பெற்றேர் அறியா நிலையிலேயே காதல் வாழ்வில் கலந்தனர் என்பது வெள்ளிடைம2ல. இங்கிலையில் ஏற்பட்ட பெரு மாற்றத்தை முழங்கு
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/41
Appearance