உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? வது சிலம்பே எனலாம். இத்தலைக் காப்பியத் துள்ளேயே பெற்ருேர் பார்த்துச் செய்யும் திரு மணம் தெளிவுறத் தென்படுகிறது; சாதிவழித் திருமணமும் சாற்றப்படுகிறது; மாமுது பார்ப் பான் மறைவழிகாட்டகடைபெறும் மனமும் காட்சி அளிக்கிறது. (தொகை நூல்களுள் பிற்காலத்த தாய்க் கருதப்படும் கலித்தொகையுள்ளேயும் இக் காட்சி வருகிறது. கலி. 69:3.7). எல்லாவற்றிற் கும் மேலாகச் சிலப்பதிகாரக் கண்ணகி சிலம்புகழி கோன்பை மேற்கொண்டவள் அல்லள் என்பதும் விளங்குகிறது. அதற்கு ஒரு பெருஞ்சான்று திரு மணமான பின் கணவனைப் பிரிந்த கண்ணகி 'அஞ்செஞ்சீறடி அணி.சிலம்பொழிய (சிலம்பு-4:37) அல்லற்பட்டாள் என்பதால் அறியலாகும். பழந்தமிழ் நாட்டில் கால் வருணமும் குடிப் பாகுபாடுகளும் இருந்திருக்கக் கூ டு மா யி னு ம் (புறம்) இடைக்காலத்தும்-ஏன் - இக்காலத்தும் இருக்கும்-சாதி’க் கடுமையும் கொடுமையும்;இல்லை? அது திருமணச் சிக்கல்களுள் ஒன்ருக அமைய வில்லை என்றும் துணிந்து கூறலாம். சாதிக் கொடுமை பற்றி முதன்முதலாக அறியும் வாய்ப்பை ‘மணிமேகலையே வழங்குகிறது எனலாம் ஆபுத் திரன் கதை அறிந்தார் இவ்வுண்மை அறிவாா. (5) இனி, இந்த ஒப்பாய்வு நிலையிலிருந்து ஒரு சிறிது விலகி சங்ககாலத் திருமண விழாக்கள்