உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 இனி அகம் 136 அறிவிக்கும் செய்திகளைக் காண்போம்: 1. இறைச்சி கலந்து ஆக்கப்பட்ட வெண் சோற்று விருந்து நடைபெற்றது. (இப்போது திருமணங்களில் புலால் உணவுஇல்லை.) 2. திங்கள் உரோகிணியைக் கூடிய கல்லோ ரையில், மணமனை அணிசெய்யப்பட்டுக் கடவுள் வழிபாடு நடைபெற்றது. (இப்போதும் இவ்வழக் கம் உண்டு.) 3. மணமுழவும் முரசமும் முழங்கின. (இப் போதும் முழவுக்குப் பதில் மேளம் - காதசுவரம்.) 4. தலைவிக்கு மணரோட்டு நடைபெற்றது. இது இப்போதும் உண்டு.) 5. வாகையிலை அறுகின் கிழங்கிலுள்ள அரும்புகளோடு சேர்த்துக் கட்டப்பெற்ற வெண் ணுால் தலைவிக்குக் காப்பாகச் சூட்டப்பட்டது. (இப்போதும் ஒரு வகையில் காப்புக்கட்டும் சடங்கு உண்டு.) 6. தமர் தலைவிக்குத் துாய உடைகளே அணி வித்தனர். (இது இப்போதும் உண்டு.) 7. தமர் தலைவிக்குப் பல அணிகளை அணி வித்து, அங்ங்னம் அணிவித்ததால் உண்டான வியர்வையை ஆற்றினர். கல்லாவூர் கிழார், விற்றுாற்று மூதெயினனுர் ஆகிய இருவேறு பார்ப்பனர் அல்லாப் புலவர்