உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 2. தாலி கட்டல் இல்லை. 3. திருமண நாளன்றும் இறைச்சிசோறு விருந்தாக அமைந்தது. இம்மூன்றனுள்ளும் முதலாவது தமிழர் சமு தாயத்தில் வைதீகத்தின் தாக்குதலைப் புலப்படுத் தும். இதுபற்றிய முதற் குறிப்புகள் சங்கநூல் களுள் காலத்தால் பிற்பட்டதாய்க் கருதப்படும் கலித்தொகை யு ள்ளும் சிலப்பதிகாரத்துள்ளும் காணப்படுகின்றன. இனி, தாலி பற்றிக் கூர்த்த கருத்து வேறு பாடுகள் உண்டு. இது பற்றி டாக்டர் இராச மாணிக்கனர் தமிழர் திருமணத்தில் தாலி என்று ஓர் ஆய்வு நூலே ஆக்கியுள்ளார். அதில் தமிழர் வாழ்வில் தாலி 10-ஆம் நூற்ருண்டில்தான் வந்தது என்று முடிவு கட்டியுள்ளார். சிலம்புச் செல்வர் தலைவர் ம.பொ.சி. அவர்கள் தமது செங் கோலில் சங்ககாலத்திலேயே:தாலி'உண்டு என்று வாதிட்டுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் தொகைநூல் களில் திருமணத் தாலி பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. ஈகை அரிய இழை அணி மகளிரொடு’ என்று வரும் புறகானூற்றுத் தொடரில் (புறம் - 127) ஈகை அரிய என்ற சொற்கள் இழையிலும் இழையணிந்த மகளிரையே சாரும் என்பது என் புதுக் கருத்து. அவ்வாறு பொருள் செய்யின் 'கொடையாகவும் கொடுத்தற்கரிய பெண் கள் என்ற பொருள் பொலியும்.