உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இனி, சிலம்புள்வரும் மங்கல அணி எதுவென உரையாசிரியருக்குள்ளேயே குழப்பம் உள்ளது. 'மாங்கல்ய சூத்திரமாகவும் இருக்கலாம் என்னும் உரையாசிரியரும் அக்கருத்தில் உறுதியாக இல்லா மல் இயற்கை அழகாகவும் இருக்கலாம்' என்று எண்ணுகிருர். மே லு ம் திருமணம் கொண்ட போதும் கணவனை இழந்து பெர்ற்ருெடி அணி உடைத்தபோதும் கண்ணகியின் கழுத்தில் மங்கல அணி' பற்றிய குறிப்பு ஏதுமில்லை. எனவே சிலம்பின் துணைகொண்டு தாலி இருந்தது என உறுதிகூற முடியாது என்றே தோன்றுகிறது. இனி, இத்தாலி பற்றி யான் கூறத்தக்க புதிய செய்தி டாக்டர் மா. இராசமாணிக்கர்ை முடிவு கட்டியதுபோல் இல்லாமல் எட்டாம் நூற்ருண் டிற்கு முன்பே தாலி தமிழர் திருமணத்தில் ஒரோ வழியேனும் இடம் பெற்றிருக்க வேண்டும் என் பதே. காரணம் திருமங்கை மன்னன் திவ்யப்பிர பக்தப் பாடல் ஒன்றே ஆகும். அது வருமாறு : அந்தகன் சிறுவ னரசர்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று, எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் ! என்ன, சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப, இந்திரன் சிறுவன் தேர்முன்நின் ருனத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. -பெரியதிருமொழி-2-3-6. (இப்பாடல் டாக்டர் மா. ரா. பார்வையில் படாமை வியப்பிற்குரியது.)