70 கட்டுரைகளையும் நூல்களையும் ஆழ்ந்து கற்றுப் பயன் அடைய வேண்டும். பிள்ளைகட்கு உணவின் அவசியம் தெரியாது; சிலவற்றை விரும்புவர்; சிலவற்றை விரும்பார். அவர்களுக்கு விருப்பமில்லாத பொருள்களிலுள்ள சத்துக்கள் அவர்கட்கு விருப்பமான எந்தப் பொருள்களில் இருக்கின்றன என்பதை அறிந்து உணவு கொடுத்தல் வேண்டும். உணவு உண்ணக் கட்டாயப்படுத்தக் கூடாது. விரும்பியவற்றை விருப்புடன் உண்ணப் பழக்க வேண்டும். சில குழந்தைகள் பசி, சாப்பிட விருப்பம்-இவை இருந் தும் சாப்பிட மறுக்கும். நரம்புத் தளர்ச்சி, புரட்சி மனப்பான்மை, அடம்பிடித்தல்-காரணமாகக்கூட அவ்வாறு மறுக்கலாம். அத்தகைய குழந்தை களிடம் இரக்கம், பரிவு, அன்பு காட்டி அவைகளின் மனத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அறிந்து அதைத் தவிர்க்க முற்பட வேண்டும். சுறுசுறுப் பான குழந்தைகள் வயதுவந்த உடல் உழைப்பாளி யைப் போன்று கடின வேலை செய்ய ஆற்ற லுடையனவாயிருக்கும். 2 உடுக்கும் உடை உடல்நலத்துக்கே உடை "ஆடையில்லாதவன் அரை மனிதன்' என்பது ஆன்ருேர் வாக்கு. சத்துள்ள உணவால் மட்டும்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/71
Appearance