72 களைக் கொன்று அவற்றின் தோலால் ஆகிய ஆடைகளை உடுத்த வேண்டிய இன்றியமையா மையே இல்லை. கம்பளி ஆடையைப் பயன்படுத் தும்போதும் உள் ஆடை நூலாடையாக இருத்தல் வேண்டும். அடிக்கடி உள் ஆடைகளைத் துவைத்து உலர்த்திச் சுத்தமாக உடுத்த வேண்டும். குழந்தை களைக் குளிப்பாட்டினவுடன் உலர்ந்த வெண்மை யான உள் ஆடைகளை அணிவித்தல் வேண்டும். இதனுல் குழந்தைகட்கு மன மகிழ்ச்சியும் உடல் கலமும் ஏற்படும். உள் ஆடை தளர்த்தியாகவோ அல்லது இறுக்கமாகவோ இருத்தல் கூடாது. இதல்ை வளரும் குழந்தைகளின் இரத்த ஒட்டமும் தசை அசைவுகளும் இடர்ப்படும். உட் காருதல், கிற்றல், கடத்தல் முதலிய பழக்கங்களும் பாதிக்கப்படும். மேலும் உடைகளைத் தளர்த்தியாகத் தைத்துப் பயன்படுத்துவதால் குழந்தைகள் தாமாகவே உடைகளைக் கழற்றவும் திரும்ப உடுத்திக் கொள் ளவும் கற்றுக்கொள்ள உதவியாயிருக்கும். இரவில் குழந்தைகள் தாராளமாய்க் கைகால் களை நீட்டிப் புரண்டு படுக்கத் தக்க முறையில் தளர்ச்சியான மெல்லிய ஆடைகளைப் போடவேண் டும். இடுப்புக் கச்சங்களையும் தளர்த்திவிடவேண் டும் சிறு பிராயத்திலேயே தளர்த்தியான மிதியடி களை அணிவித்துப் பழக்கினல் வளரவளர, மிதி யடிகளின் இன்றியமையாமை உணர்ந்து சரியான முறையில் அவற்றைப் பயன்படுத்தக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும்.
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/73
Appearance