உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கழிவறை என்று ஆறு அறைகள் இருப்பது நல்லது; ஒரு கூடமும் இன்றியமையாதது. மேற்குறிப்பிட்ட ஆறு அறைகளுள் முன் நான்கும் பெரியவையாயும் பின்னிரண்டும் சிறியவையாயும் இருக்க வேண்டு வது இயற்கை. இவ்வாறு அமைந்த வீட்டில் வாழ வசதியற்றவர்கள் ஒரே கூடம் உள்ள வீட்டில்கூட வாழலாம். ஆனல், அந்தக் கூடம் நிறைந்த காற்றும் ஒளியும் உடையனவாக இருத்தல் இன்றி யமையாதது. வசதி உடைய வீட்டில் இருப்பவர்கள் வீட் டிற்கு முன்னும் பின்னும் குழந்தைகள் தோட்ட வேலைசெய்ய ஊக்கம் அளிக்கவேண்டும். ஒரே கூடத்தில் வாழ்பவர்கள் இயலுமேல் ஒரு சிறு மீன் வளர்ப்புத் தொட்டி வைத்துக் குழந்தைகள் அதில் ஈடுபட்டு மகிழச் செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டு வாழ்க்கைக்கும் பிள்ளை வளர்ப்புக் கும் உள்ள ஒரு தொடர்புபற்றி ஆழ எண்ணல் இன்றியமையாதது. அது, சின்னஞ் சிறு குழக் தைகள் முன்னிலையில் பெற்ருேர்கள் பாலுணர்ச்சி வாழ்க்கை வாழக்கூடாது என்பதே ஆகும். குறை வான வீட்டு வசதிகளாலும் தன்னடக்கம் இன்மை யாலேயே பெற்ருேர்கள் பாலுணர்ச்சி வாழ்க்கை பிள்ளைகளைப் பிஞ்சிலேயே பழுக்கச் செய்யும். எண்ணும் எண்ணம் சூழ்நிலையின் சிறப்பு உணவால் வளரும் உடலை உடையாலும் உறை யும் மனையாலும் மட்டும் பாதுகாத்தல் போதாது.