உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 குழந்தைகள் தாயின் பழக்க வழக்கங்களையே கண்கண்ட காட்சியாகக் கொள்கின்றனர். எனவே பெண்ணேப் பெற்றவள் மிக எச்சரிக்கையாக அவர்களுக்கு முன்மாதிரியாக கடந்து கொள்ளுதல் வேண்டும். பொறுமைப் பயிற்சி இருந்தால் அன் புப் பயிற்சி தானகவே வந்துவிடும். வீட்டுச் சூழ லில், விருப்பமில்லாத பேச்சுகள், எதிர்ப்புப் பேச்சுகள், சண்டைகள், வம்புகள், பயனற்ற எதிர்ப்புகள், பிறரைத் துன்புறுத்தும் சொற்கள், வாய் வீச்சுகள் இவற்றை விட்டுவிடுதல் பயனளிக் கக்கூடிய செயல்கள். குழந்தைகளுக்கிடையே தாய் காட்டும் ஏற்றத் தாழ்வே அவர்களுக்குள் குழப்பங்களை உண்டு பண்ணும்; இது உயர்வு மனப்பான்மையை அல்லது தாழ்வு மனப்பான் மையை வளர்த்து விடும். அன்றியும் இவர்களுக் குக் காட்டும் அன்பிலே வேறுபாடு இருத்தல் கூடாது. இது இளம் உள்ளங்களில் பொரு மையை உண்டாக்கும்; பொறுமையும் அன்பும் இல்லையெனில் சிறுசிறு வேறுபாடுகள்கூட குழப் பங்களை ஏற்படுத்தும். ஆட்டமில்லாத அன்பிற்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தேவையானது. இந்த மனப்பயிற்சி அன்பை வளர்க்கும்; பொறு மையைப் பெருக்கும். தான் என்ற ஆணவத்தைத் தகர்க்கும். இன்றைய அறிவியல் உலகிலே பெண்களுக்கு வீடு சிறியதாகிக் கொண்டே வருகிறது. வெளி உலகம் மிகப் பெரியதாய்-திய சோதனைகள் நிறைந்ததாய்-எண்ணங்களையும் இயல்புகளையும்