உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஈர்க்கக் கூடியதாய்-கற்றுக் கொடுக்கக்கூடிய தாய் இருக்கின்றது. ஆகையில்ை விரும்பத்தகர்த் பழக்க வழக்கங்களே வளர்ந்து வருகின்றன. இக் நிலையில் செய்யாதே, செய்யாதே' என்று எதிர் மறையிலே எச்சரிப்பதைவிட அதனுல் மகளின் வெறுப்பை வளர்ப்பதைவிட-கெட்ட பழக்க. வழக்கங்கள் இவை இவை என்று எடுத்துக்கூறி, அவைகளில் ஈடுபட்ட பெண்கள்-தங்கள் செயல் களில்ை இன்றைக்கு சமுதாயத்தில் துன்புற்று வாழும் இழிநிலைகளை எடுத்துக் காட்டி கேரான வழிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலைப் பயிற்று வித்தல் வேண்டும். நன்மைகள் மிகுந்திருந்த, காலத்தில் கன்மைகளைப் பற்றியே தெரிந்து கொள்ள வேண்டியது நன்மையாயிருந்தது. இன்று நீரினின்றும் பால் எடுக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டதால் நீரையும் பாலையும் இனம். கண்டுகொள்ளக்கூடிய திறன் தேவையாகிவிட் டது. அதை அளப்பதற்கு அறிவியல் ஒரு “லாக்டா மீட்டரைத் தந்துள்ளதே! உண்மையை யும் நகலையும் வேறுபடுத்திக் காணப் பெண் உள். ளத்திற்கு ஒரு அளவுகோள் வேண்டாவா ? மனப் பயிற்சி மட்டும் முறையாக ஏற்பட்டு விட்டால் சிக்கல்களை அவிழ்க்கும் திறனும் தானு, கவே வக்துவிடும். உழைப்பு மிகுதியாலோ, உள் ளக் கிளர்ச்சிகளாலோ, வயது முதிர்ச்சியாலோ, சூழ்நிலை காரணமாகவோ தன்னிடத்திலே ஏற்ப்டு கின்ற சில குறைகளைக்கூடத் தாய் நீக்க முற்படு தல் வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் பண்