பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மந்திரி பஹாராஜா

மதுரா என்ன! என் கண்மணி வந்து விட்டானு:

மந்திரி: இல்லே மஹாராஜா ! எங்கு தேடியும் இளவர

சர் கிடைக்கவில்லையாம் !

மதுரா : என்ன ஒரு வருஷமாகப் போகிறது. இன்னும் என் கண்மணி அகப்படவில்லேயா? காந்தரூபா ! வேந்தர்க்கெல்லாம் வேந்தனுக விற்றிருப்பாய் என்றல்லவோ கனவு கண்டேன். ஐயோ! ஏற் கெனவே புண்பட்டிருக்கும் மங்கையர்க்கரசிக்கு இந்த சஞ்சலமான செய்தியை, நான் எப்படி தெரி விட்பேன்.

(என்று சொல்லி அவ்விடத்தை விட்டுப் புறப் படுகிறன்.)

காட்சி - 12

இடம் பூஜை அறை (மங்கையர்க்கரசி அறையில் தேவி விக்ரகக் தின் முன் கண்ணிர் விட்டபடி)

மங்கை : லோக மாதா என் ப்ரபுவைக் காணுமல் நான் படும் அவஸ்தையை உன்னையன்றி வேறுயாரால் உணரமுடியும். என்னே வேதனைப்படுத்துவது உனக்கு ஒரு விளையாட்டா? என் மீது கருணை கிடையாதா? தாயே! ஏன் இந்த மெளனம்? கல்லுக்கு மெளனத்தைப் படைத்த நீ; உன் இத யத்தையும் ஊமையாக்கிக் கொண்டாயா? தேவி

(என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மதுராங்கதன் அங்கே வருகிறன். அப்போது)