பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு சுரதா

மங்கையர்க்கரசி ! இது சினிமாவுக்காக எழுதப் பட்ட கதை. சினிமா எடுக்கப்பட்டு ஓரளவு வெற்றி யுடன் கடந்து வருகிறது.

ஒருகதை சினிமாவில் வந்தபின் அதைச் சுவடியாக அச்சிட்டு வெளியிடுவதால் மக்களிடம் சினிமா அறிவு வளரும். கதையமைப்பு, சோடிப்பு, பேச்சழகு, முதலிய வற்றின் அருமை பெருமை விளங்கும்.

சினிமாவில் வந்த கதையைப் பெரும்பான்மை முதலாளிகள் அதை அப்படியே அச்சிட்டு வெளியிட எண்ணுவதில்லை. அவர்கட்குக் கதை கிடைக்கும் வகையிலும், அதை எழுதி முடிக்கச் செய்த வகை யிலும், அவர்கள் கையாண்ட சூழ்ச்சிகளும், போதிய தமிழறிவின்மையும் அதற்குக் காரணமாகும்.

சுரதா எழுதிய மங்கையர்க்கரசியை, அவர் தம் பொறுப்பிலேயே சுவடியாக அச்சிட்டுத் தருகிரு.ர். இதல்ை ஒர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய கையிருப்புத் தம்மிடம் இருப்பதாக நம்புகிருர் சுரதா. இரண்டு காரணங்களால் சுரதாவின் எழுத்துக்குச் சுரதா எழுத்தே நிகர்.

முதற்காரணம் : அவர் பிறர் எழுதியதிலிருந்து திருடுவதில்லை; கருத்தையோ தொடரையோ தானே தோன்றிய சொற்ருெடர் ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதைத் துணிக்கை எடுத்துக்காட்டாக : ஒரு `கவிஞனை கல்ல முறையில் அறிமுகப்படுத்துகிருர் சுரதா :

இவர் கவிஞர் திலகம் காவியங்களின் தந்தை” என்று. சர்வாதிகாரத்தை வெறுத்துப் பேசுகிருர் சுரதா :