பக்கம்:மச்சுவீடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்குச் சக்கரச் சாமி குழந்தைகளுடைய உள்ளத்தில் எதையாவது புகுத்த வேண்டுமென்ருல் ஆட்டம் பாட்டம் எல்லாம் வேண்டும்; சொல்லுகின்ற வார்த்தைகளிலே ஒரு மோகன சக்தி இருக்கவேண்டும். நாடோடியாக வழங்கும் குழந்தைப் பாடல்களிலே இந்த அம்சங்களை நிறையப் பார்க்கலாம். -

'ஜிகி ஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிச்சாம்' - என்று சொல்லும்போது குழந்தை துள்ளிக் குதிக் கிறது; குருவியைப் போலத் தத்தித் தத்திப் பாய் கிறது. கைகளைப் பக்கவாட்டில் நீட்டி இறக்கையைப் பரப்பிப் பறக்கும் பறவை போலக் குதித்துக் கூத்தாடு கிறது. அந்தப் பாட்டின் ஒலியும் தாளமும் குழந் தைக்கு ஒரு வகையான ஆவேசத்தை மூட்டிவிடு கின்றன. -

தெய்வத்தைப்பற்றிக் குழந்தைக்குச் சொல்ல வேண்டுமானல் எளிதில் முடிகிற காரியமா? பெரிய வர்கள் உள்ளத்திலே தெய்வ ஞாபகம் உண்டாவது எவ்வளவு அருமையாக இருக்கிறது? ஆயிரக்கணக் கான பாடல்களைப் பெரியோர்கள் பாடிச் சென்றிருக் கிருர்கள். அந்தப் பாடல் வெள்ளத்தினிடையே நடந்துகொண்டும், ஒடிக்கொண்டும், தொழில் செய்து கொண்டும் வாழ்கிருேம். ஆனாலும் ஒரு பாட்டாவது உள்ளத்துக்குள்ளே பாய்வதற்கு நம்முடைய பக்குவம் இடம் கொடுப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/21&oldid=610690" இலிருந்து மீள்விக்கப்பட்டது