பக்கம்:மச்சுவீடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மச்சு வீடு

குழந்தை உள்ளத்திலே தெய்வத்தை உலாவச் செய்ய வேண்டுமானல் அதற்கு வழி என்ன ? குருவி யானுலும் சரி, கோவிந்தனைலும் சரி, மோகன மான ஒலியும் உற்சாகத்தை முட்டும் தாளமும் அமைந்துவிட்டால் குழந்தை நிச்சயமாகக் குதிக்கும், கூத்தாடும். - -

இந்தத் தந்திரத்தைத் தமிழ்நாட்டார் அறிந்திருக் கிருர்கள். நாடோடிப் பாவலன் நன்கு தெரிந்து கொண்டிருக்கிருன். அவன் குழந்தைக்குத் திருமாலின் தரிசனத்தைச் செய்து வைக்கிருன் , பழக்கம் பண்ணி வைக்கிருன் என்றுதான் சொல்லவேண்டும்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தும், அதில் இல்லாத பல்லாயிரம் பேர்கள் வேறு வேறு இருந்தும் குழந்தைக்கு அவற்றைத் தெரிவிக் காமல், 'சங்குச் சக்கரச் சாமி” என்று அறிமுகப்படுத்து கிருன் பாவலன். குழந்தை அந்தச் சாமியைப்பற்றிக் கேட்கும்போதே கூத்தாடத் தொடங்கிவிடும். சங்குச் சக்கரச் சாமி சிங்குச் சிங்கென ஆடிக்கொண்டு

பிரசன்னமாகிறது. ... . . . . . . . . . சங்குச் சக்கரச் சாமி வந்து

சிங்குச் சிங்கென ஆடுமாம்.அது சிங்குச் சிங்கென ஆடுமாம்-அது - சிங்குச் சிங்கென ஆடுமாம் ! (சங்குச்). பாட்டைச் சொல்லுகிறவர் சும்மா சொல்ல முடி யுமா? கையிலே அகப்பட்டதை மத்தளமாக வைத்துக் கொண்டு தட்டினுல்தான் அவருக்குப் பாட்டைப் பூர. ணமாகப் பாடும் திருப்தி ஏற்படும். அப்படி இருக் கிறது பாட்டின் தாளப் போக்கு. அந்தக் கொட்டுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/22&oldid=610691" இலிருந்து மீள்விக்கப்பட்டது