பக்கம்:மச்சுவீடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்குச் சக்கரச் சாமி 17

ஏற்றபடி குழந்தையும் சிங்குச் சிங்கென ஆடுவதில் என்ன தடை? . -

இந்த நிகழ்ச்சிகளும் அந்தச் சாமியின் செயல் களே என்று நாடோடிப் பாவலன் சொல்லுகிருன்.

கொட்டுக் கொட்டச் சொல்லுமாம்-அது கூத்தும் ஆடப் பண்ணுமாம் சங்குச் சக்கரச் சாமி வந்து சிங்குச் சிங்கென ஆடுமாம் ! இதோடு நின்றுவிடுகிறதா பாட்டு? மேலும் செல் கிறது; திருமாலின் அவதார விசேஷங்களைக் குழந் தைப் பாஷையிலே சொல்கிறது. திரிவிக்கிரமாவ தாரத்தைப் புலவன் நினைத்துக்கொள்கிருன். பாட்டு லேசாகத் தாளத்தோடு குதித்துக் குதித்து வருகிறது. . உலகம் மூணும் அளக்குமாம்- அது

ஓங்கி வானம் பிளக்குமாம்! குழந்தைகூட அப்படியே நடிக்கும்போல் இருக் கிறதே! ஓங்கி வானம் பிளக்குமாம் என்னும்போது குழந்தையின் கைகள் அதனையும் அறியாமல் மேலே போகின்றன. பாட்டில்தான் எத்தனை மோகன சக்தி !

நாடோடிப் பாவலன் அடுத்தபடி ஒரு பெரிய மந்

திரச் செயல் செய்கிருன். ஹிரண்யனைக் கொல்லும்

பொருட்டுத் தூணிலிருந்து புறப்பட்ட நரசிங்கம்

அண்ட கடாகங்களெல்லாம் நடுங்கும்படியாகச் சிரித்

தது என்று கம்பர் பாடுகிருர், * . .

8:- குழந்தைப் பாட்டைச் சொல்லும் புலவன் நரசிங்

கத்தைக் குழந்தைக்கு இனிய பொருளாக மாற்றிவிடு

கிருன். அது கலகலவென்று சிரிப்பதை மாத்திரம்

2 - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/23&oldid=610692" இலிருந்து மீள்விக்கப்பட்டது