பக்கம்:மச்சுவீடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதர் உற்சவம்

சமுதாயத்தின் உயர்ந்த படிகளிலே உலவி வருகிறவர்களுக்குச் சிந்தனையும் வார்த்தைகளும் உயர்ந்த தோரணையிலே அமைவது இயல்பு. ஒரு மனிதனுடைய பேச்சும் செயலும் அவனைச் சுற்றி யுள்ளோருடைய பழக்கவழக்கங்களைச் சார்ந்து வள ரும். ஆகையால் தொழிலாளிகளுடைய கூட்டத்துக் கிடையே நாம் புகுந்து பார்த்தால் அவர்கள் தொழில் பற்றிய பேச்சை அதிகமாகக் கேட்கலாம். அவர் களுடைய ஜீவாதாரமான தொழிலின் நினைவே அவர் கள் பேச்சில் வேடிக்கையாகவும் உபமானமாகவும் வசவாகவும் வெளிப்படும்.

தெய்வ பக்தி, பாரமார்த்திக எண்ணங்கள் உடைய குடும்பத்திலே பழகுகிறவர்களுக்குத் தெய்வ ஞாபகமும் ஜீவ தத்துவத்தைப்பற்றிய சிந்தனைகளும் ஒருவர் சொல்லிக் கொடுக்காமலே ஏற்படுகின்றன. நாடோடிப் பாடல்களில் இந்த வாழ்க்கை நிலை அப்படி யப்படியே பதிந்து விளங்குவதைக் காணலாம். இடம், காலம், மனித சமுதாயம் இவற்றைச் சார்ந்த அடை யாளங்கள் நாடோடிப் பாடல்களில் இருப்பதைக் கொண்டு அவற்றின் சரித்திரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள வழி உண்டு. - - - -

காஞ்சீபுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் வழங்கும் நாடோடிப் பாடல்கள் பலவற்றில் காஞ்சீபுரம் வரத ராஜப் பெருமாளும் காமாட்சியம்மையும் தரிசனம் அளிப்பது ஆச்சரியம் அன்று. பாடுகிறவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/25&oldid=610694" இலிருந்து மீள்விக்கப்பட்டது