பக்கம்:மச்சுவீடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மச்சு வீடு

கூட்டம் வாழ்க்கைத் தரத்தில் எந்தப் படியில் நிற் கிறதோ அதற்கு ஏற்ற முறையில் பாட்டு அமைந் திருக்கும். -

வரதராஜப் பெருமாளுடைய உற்சவத்தைப் பெண்கள் ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு ஒரு நாடோடிப் பாட்டு உதவுகிறது. பாட்டில் உற்சவ நடை முறை வரிசையாக வருகிறது. கொடியேற்றம் முதல் விடாயாற்றிவரையில் அடுக்கடுக்காக வருகிறது. அவற்றை ஞாபகப்படுத்திக்கொள்ள ஒரு சுலபமான வழியைப் பெண்கள் கண்டுபிடித்திருக்கிருர்கள். பாட்டுக்கு உரிய ஓசையோடு எந்த விஷயத்தை முக்கியமாகச் சொல்ல வேண்டுமோ அது ஒரு பாட் டின் இறுதியிலே வரும்படி எதுகை அமைத்துப் பாடுகின்ருர்கள்.

வரதர் உற்சவம் வைகாசி மாதத்தில் நடைபெறு கிறது. இதுதான் பாட்டுக்கு ஆரம்பம். அதை அவர்கள் எப்படி ஞாபகப்படுத்துகிருர்கள் ?

குட்டை குளத்தில் பாசி கோவிலில் ஆடுவாள் தாசி வடக்கே போனுல் காசி - வரதர் உற்சவம்வை காசி ! வைகாசி என்பதற்கு ஏற்ற எதுகை வரும் வார்த்தைகளை அமைத்துப் பாடுகிருர்கள். அந்த வார்த்தைகளும் அவற்றைக் கொண்ட வாக்கியங்களும் அந்தப் பெண்கள் வாழ்க்கையில் அறிந்தனவாக இருக்கின்றன. ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அர்த் தத்தில் தொடர்பு இல்லை. ஆலுைம் ஒசையிலே, பாட்டின் அங்கம் என்ற முறையிலே, தொடர்பு இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/26&oldid=610695" இலிருந்து மீள்விக்கப்பட்டது