பக்கம்:மச்சுவீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதர் உற்சவம் 21

உற்சவம் ஆரம்பமாகிவிட்டது. ஆழ்வார் முதல் நாள் எழுந்தருளி மார்க்கங்களைச் சரி பார்ப்பதாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அதை 'முள்ளுப் பொறுக்குதல்' என்று வீட்டுப் பாஷையில் வழங்குவார்கள். அதைப் பாட்டுச் சொல்லும் மாதிரி வருமாறு:

பனை ம ரத்தில் கள்ளு பசங்கள் வாயில் சொள்ளு கொல்லே விளைந்தால் எள்ளு ஆழ்வார் பொறுக்கும் முள்ளு பிறகு துவஜாரோகணம் ஆகிறது.

- சாதம் கொதிக்கிறது வடியும் கையில் காரியம் படியும் நினைச்ச காரியம் முடியும் வரதர்க் கேறும் கொடியும்-நம்ப வரதர்க் கேறும் கொடியும்.

பிறகு பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளுகிருர்.

வாசலில் விற்குமாம் மாம்பழம் வருந்தி அழைத்தால் இப்புறம் வரமாட்டேன் என்ருல் அப்புறம்-நம்ப - வரதர் ஏறும் சப்பரம். . . . உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வரதர் காலையில் ஒரு வாகனத்திலும் மாலையில் ஒரு வாகனத்திலும் எழுந்தருளி உலா வருகிருர்,

உடைமை பண்ணற தங்கம்-வரதர் உலகம் பதிகு லெங்கும் - தெற்கே போனுல் ரீ ரங்கம் வரதர் ஏறும் சிங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/27&oldid=610696" இலிருந்து மீள்விக்கப்பட்டது