பக்கம்:மச்சுவீடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மச்சு வீடு

செய்கிற காரியம் நிமிஷம் செய்யாமல் போளுல் தாமஸம் கும்பல் கூடினுல் துமிசம் வரதர் ஏறும் அம்சம். ஹம்ச வாகனத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளும் பெண்மணி அகத்துக் காரியத்தைப்பற்றிய தத்துவத் தைச் சொல்கிருள். எந்தக் காரியத்தையும் கவனத் தோடு செய்தால் நிமிஷம் செய்துவிடலாம்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால் தாமசமாகிவிடும். நாலு பேரைச் சேர்த்துச் செய்யலா மென்று இருந்தால் எல்லாம் பயனற்றுப் போகும்' என்று அவள் சொல்கிருள். ஆங்கிலத்தில், பல சமையற்காரர்கள் சேர்ந்து சமையலைக் கெடுப்பார்கள்' என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிக் கருத்தையே குழந்தைக்கும் புரியும் பழகு தமிழில், "கும்பல் கூடில்ை துமிசம்" என்று வீட்டு எஜமானி சொல்கிருள். - -

மேலே வரும் வாகனங்களைக் கவனிக்கலாம்.

செய்கிற காரியம் அறிவேன் - சூட்சு மங்களைத் தெரிவேன்

உற்ருர் உடைமையைப் பறியேன் வரதர் ஏறும் சூரியன், கண்தெரி யாதவன் குருடன்-வழி கட்டி அடிக்கிறவன் திருடன் கல்யாணம் பண்ணுத முரடன்-நம்ப வரதர் ஏறும் கருடன், தெற்குத் தென்னண்டை மடையும் முடையும் திருப்பூக் கூடையும் ராஜாம் பேட்டைக் கடையும் . வரதர்க்குப் போடும் குடையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/28&oldid=610697" இலிருந்து மீள்விக்கப்பட்டது