பக்கம்:மச்சுவீடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 35

அந்த ஏழைத் தபஸ்வி கண்ணை விழிக்கவில்லை. அவருக்கு முன்னலே பாலகோபாலன் இந்த ஊனக் கண்ணுலே கண்டு களித்து இன்புறும்படி வந்து நிற் கிருன். முனிவர் பார்க்கவில்லை. “உலகத்தின் காட் சியிலே கடவுள் இல்லை" என்ற திடமான எண்ணத் திலே கண்ணை மூடிக் கொண்டவராயிற்றே! கண் ணைத் திறந்தால் உலகம் ஒளியைச் சிதறச் செய்யும் என்று எண்ணினவர்போல் இறுக மூடிக்கொண்டவ ரல்லவா ? இதோ கண்கொள்ளாப் பேரழகுடன் கண்ணன் வந்து நடனம் செய்கிருன். அவனைப் பார்க்கப் பாக்கியம் இல்லை. அவர் கண்கள் கண்ணன் அழகை ஏற்றுக்கொள்ளாமல் இமைக் கதவு அடைத் துப் பூட்டி இருந்தன!

கண்ணன் தன் திருவுருவ அழகெல்லாம் குலுங் கத் திருமேனி குலுங்க ஆடுகிருன் : நிருத்தம் செய்கின்ற சேவைகண்டு

நித்திய பக்தர்கள் கண்குளிர முத்து மாலையும் தோள்.அசைய

முகம் சிவந்துமே வேர்த்தரும்ப மற்றும் வார்காதும் பணிகுலுங்க

விசால நயனங்கள் சுழன்றுவர கொத்துத் துளவியும் வேர்க்கொழுந்தும் குலுங்கியே நின்று பரிமளிக்க தத்தித் தத்தி அவர் நடந்து

தங்கிச் சப்பாணி கொட்டுவாராம்! நித்தியா னந்த ரூபர்அங்கே

நிருத்தம் ஆடத் துவக்கிளுரே !. கண்ணன் அசைந்தாடுகிருன். அவன் திருமேனி ஒளி விடுகிறது. துழாய் மாலை மணம் வீசுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/41&oldid=610710" இலிருந்து மீள்விக்கப்பட்டது