பக்கம்:மச்சுவீடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மச்சு வீடு

பூநீவாங்கள் கண்ணைத் திறக்கவில்லை. கண்ணன் சலிக்கவில்லை. பின்னும் குழந்தைத் திருவிளையாடல் களைக் காட்டத் தொடங்கின்ை. கனிவாயூறல் சிந்தச் சிலம்புகள் ஆர்க்கப் பாதம் சிவக்க நிருத்தம் செய் தான். அந்தச் சிலம்பொலி முனிவர் காதில் விழ வில்லை. தம் முன்னலே நிற்கும் அழகுருவத்தைப் புறக்கணித்து விட்ட அவர் அகத்துக்குள்ளே எதையோ தேடிக்கொண்டிருந்தார். இனிய நாதச் சிலம்பின் ஓசை அவர் காதில் விழுகின்றது. அதைக் கேட்கப் பாக்கியம் இல்லாமல், யோக சாதனையால் உள்ளே எழும் ஒலிகளைக் கேட்க ஏங்கிக் கிடந்தார். கண்ணனே பின்னும் நடனம் செய்கின்ருன்.

பச்சை மணியுடன் பதக்கம்தாழ

பணிகள் குலுங்கியே பளபளென்ன அஞ்சனக் கண்ணும் வார்காதும்

அழகாய்த் திருத்திய குமுற்கற்றையும் கொஞ்சும் கணிவாயின் மழலைச்சொல்லும்

கோமள மான தளர்நடையும் தஞ்சங் கொடுக்க வந்தபாலகன்

தட்டு மோதிரங் கையில்மின்ன அஞ்சேல் என்றசை வெண்ணெய்சோர

ஆயன் குதித்தாடத் துவக்கிளுனே! - பூநீவாங்களுக்கு உண்மையிலேயே கண் இருந் தால் பார்க்கட்டும் என்ற எண்ணத்தால் கண் ணன் தன் திருமேனி முழுவதும் ஆபரணங் களைத் தரித்து வந்திருக்கிருன். சொர்ணப் பதக் கமும் கெளஸ்துபமும் ழார்பில் சோதிவிடுகின்றன. முத்துக் கடுக்கனும் ரத்தின குண்டலமும் செவியில் திகழ்கின்றன. கையில் ஒத்து அசைகிறது. சித்திரக் குழல் சுருண்டசைகிறது. யசோதைகூட இத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/42&oldid=610711" இலிருந்து மீள்விக்கப்பட்டது