பக்கம்:மச்சுவீடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 37

தன அழகோடு பாலகோபாலன் நிருத்தம் செய்வ தைப் பார்த்திருக்கமாட்டாளே! அடியார்களிடத்தில் அவனுக்கு உள்ள கிருபைதான் என்ன அதிசய மானது ! -

அடியா ரிடத்தில் கிருபைபெருக

அடிகளிற் சந்தனப் பொடிஉதிரக் கமலக் கைகளில் கனகவளே

களித்தாடும் போது சுழன்று விழ வெளியாகி எங்கும் இருள் நீங்க

விசுவ ரூபர் எதிரில் நின்று நெடிய திருமேனி தனை ஒடுக்கி

திருத்தம் சுவாமியும் ஆடினரே! இருளெல்லாம் பளிரென்று விட்டு நீங்கத் தன் திருமேனிச் சோதியைப் பரப்பி அவன் ஆடினன். "இந்த ஒளியை நான் பாரேன் ' என்பவரைப்போல் முனிவர் தம் அகத்துக்குள்ளே வழி தெரியாமல் ஒளி தெரியாமல் பிரயாணம் செய்துகொண்டே இருக்கிருர்! முனிவர் முன்னே நின்று ஆடிப் பார்த்தும் அவர் விழி திறவாமல் இருப்பதைக் கண்ட கண்ணனுக்குப் பின்னும் கருணை சுரந்தது. -

பிறகே சென்று அவர் தோளேக்கட்டிப்

பின்னே ஒளித்தவர் முன்னே நிற்பர் ஆதி மூலப்பொருள் ஆனபாலன் -

அவர் மடிமேலே மிதித்தேறுவர்; மீண்டும் அவர்மேலே சாய்ந்தாடுவர்; . . .

சற்றே கடைக்கண்ணுற் கிருபைபொழிவார். என்ன செய்து பிரயோசனம் என்ன? முனிவர் குருடராக மட்டுமா இருந்தார்? செவி ட ராய் மூக்கு இல்லாதவராய், உணர்ச்சி அற்றவராய்க் கல்லைப்போல் இருந்தார். அவர் காதில் ஒலி விழுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/43&oldid=610712" இலிருந்து மீள்விக்கப்பட்டது